மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து 21ம் தேதியே அறிக்கை வெளியிட்டேன்: எடப்பாடி திடீர் அறிக்கை

சென்னை: மணிப்பூர் சம்பவம் குறித்து 21ம் தேதியே கண்டித்து அறிக்கை வெளியிட்டதாக எடப்பாடி பழனிசாமி திடீரென கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மணிப்பூர் சம்பவம் குறித்து நான் ஏதும் பேசவில்லை என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மணிப்பூர் கலவரம் துவங்கிய உடனேயே அதனை கண்டித்தும், அங்குள்ள தமிழர்களை பாதுகாப்பாக காப்பாற்ற வேண்டும் என்றும் அதிமுக சார்பில் 8.5.2023 நாளிட்ட அறிக்கை மூலம் திமுக அரசின் முதல்வருடைய கவனத்தை ஈர்த்திருந்தேன்.

குறிப்பாக, மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவம் குறித்து நான், எனது கடுமையான கண்டனத்தை 21.7.2023 அன்றே தெரிவித்திருந்தேன். அதிமுக, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதிலும், குறிப்பாக பெண்கள் பாதுகாப்புடன் நடமாட வேண்டும் என்று காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளித்து சட்டத்தின் ஆட்சியை நடத்தியது. எனவே, வாக்களித்த தமிழக மக்கள் சிரமமின்றி வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து 21ம் தேதியே அறிக்கை வெளியிட்டேன்: எடப்பாடி திடீர் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: