இந்த பாத யாத்திரைக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் பலருக்கும் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஜிகே.வாசன், பாமக தலைவர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டணியில் தற்போது வரை இடம் பெறாமல் இருந்த தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து பாஜக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில், அண்ணாமலை நடைபயண தொடக்க விழாவில் பிரேமலதா பங்கேற்குமாறு பாஜக அழைப்பு விடுத்த நிலையில் தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவு கோரினார் என விஜயகாந்த் தெரிவித்திருந்தார். பாஜக மாநில துணை செயலாளர் கரு.நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார் எனவும் விஜயகாந்த் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மரியாதை நிமித்தமாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை சின்னா பங்கேற்பார் என்று தேமுதிக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயண தொடக்க விழாவை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் புறக்கணித்துள்ளார்.
The post பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயண தொடக்க விழா: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் புறக்கணிப்பு appeared first on Dinakaran.
