சென்னை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு தேர்தலில் 9 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு: ஆணையர் ராதாகிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார்

சென்னை: சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி ராதாகிருஷ்ணன், சான்றிதழ்களை வழங்கினார். சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டரங்கில் நேற்று வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலுக்கு 2023ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின் விதி எண்.113(3)ன்படி மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் சந்திரன் (வார்டு-27), தேவி கதிரேசன் (வார்டு-39), ராஜேஷ் ஜெயின் (வார்டு-57), உஷா (வார்டு-83), கமல் (வார்டு-86),புஷ்பலதா (வார்டு-103), ஸ்ரீதரன் (வார்டு-140), செல்வக்குமார் (வார்டு-154), முருகேசன் (வார்டு-200) ஆகிய 9 மாமன்ற உறுப்பினர்கள் மட்டும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இத்தேர்தலில் மாநகராட்சியின் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக சந்திரன் (வார்டு-27), தேவி கதிரேசன் (வார்டு-39), ராஜேஷ் ஜெயின் (வார்டு-57), உஷா (வார்டு-83), கமல் (வார்டு-86), புஷ்பலதா (வார்டு-103), ஸ்ரீதரன் (வார்டு-140), செல்வக்குமார் (வார்டு-154), முருகேசன் (வார்டு-200) ஆகிய 9 மாமன்ற உறுப்பினர்கள் 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்களுக்கு மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி ராதாகிருஷ்ணன், சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு தேர்தலில் 9 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு: ஆணையர் ராதாகிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: