டோக்கியோ: ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உலகின் வல்லரசு நாடுகளின் ஒன்றாக ஜப்பான், பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாகவும் திகழ்கிறது. இங்கு மக்கள்தொகை குறைந்து கொண்டே வருகிறது. இதனால் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா அறிவுறுத்தலின் பேரில் ஜப்பானில் மக்கள்தொகை கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் சுமார் 12.5 கோடி மக்கள்தொகையே பதிவாகி உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது கடந்தாண்டை காட்டிலும் 0.65 சதவீதம் குறைவு. அதாவது 8 லட்சம் பேர் குறைவு என கூறப்படுகிறது. இந்த கணக்கில் ஜப்பான் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் சுமார் 30 லட்சம் வெளிநாட்டினரும் அடங்குவர். இதனை நாட்டின் அவசர நிலையாக கருதி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் சுமார் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் கோடி நிதியை ஜப்பான் அரசு ஒதுக்கியுள்ளது.
The post வரலாறு காணாத அளவுக்கு ஜப்பானில் மக்கள் தொகை வீழ்ச்சி appeared first on Dinakaran.
