மாங்காடு நகராட்சி பகுதிகளில் ரூ.2.25 கோடியில் புதிய பூங்காக்கள்

குன்றத்தூர்: மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பூங்காக்கள் கட்டித்தர வேண்டும் எனவும், சேதமடைந்த குளத்தினை சீரமைத்துத்தர வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பூங்காக்கள், குளம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் குளம் சீரமைப்பு, ரூ.48.50 லட்சம் மதிப்பீட்டில் வன்னியர் பட்டூர் குளம் மற்றும் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் ஒரு புதிய கால்நடை மருத்துவமனை, ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் படித்து பயன்பெறும் வகையில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் உள்ளிட்டவைகள் கட்டி முடிக்கப்பட்டது.

அதன் திறப்பு விழா மாங்காடு பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், நகரமன்ற தலைவர் சுமதி முருகன், துணை தலைவர் ஜபருல்லா, நகராட்சி ஆணையர் சுமா, நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மாங்காடு நகராட்சி பகுதிகளில் ரூ.2.25 கோடியில் புதிய பூங்காக்கள் appeared first on Dinakaran.

Related Stories: