அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது..!!

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.

நீதிபதிகள் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு செந்தில்பாலாஜி வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதம் செய்து வருகிறார். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி, அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறைக்கு கைது செய்ய மட்டுமே அதிகாரம்:

அமலாக்கத்துறைக்கு கைது செய்ய மட்டுமே அதிகாரம் உள்ளது, காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இல்லை என கபில்சிபல் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என கபில்சிபல் வாதம் செய்தார். எவ்வளவு நேரம் வாதிடுவீர்கள் என்ற நீதிபதிகள் கேள்விக்கு ஒரு நாள் முழுவதும் தேவை என கபில் சிபல் பதில் அளித்தார்.

சுங்க அதிகாரியால் ஒருவரை கைது செய்ய முடியுமா என்றால் அது முடியாது. கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை சுங்க அதிகாரிகள் பிடித்து போலீசிடம் ஒப்படைக்கலாம். காவல்துறையினர்தான் கைது செய்ய முடியும்; இது அமலாக்கத்துறையினருக்கும் பொருந்தும் என கபில் சிபல் தெரிவித்தார். ஒருவரிடம் விசாரணை நடத்தி அவரிடம் இருந்து வாக்குமூலத்தை பெற்று குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக பயன்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம்: நீதிபதி

அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் உள்ளது என நீதிபதி போபண்ணா தெரிவித்தார். வழக்கமாக அமலாக்கத்துறை தகவல் அறிக்கை எப்போது பதிவு செய்யப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். துணை குற்றங்கள் தெரிய வரும்போதும், குற்றச் செயல்களால் ஈட்டப்பட்ட நிதியை கண்டறியும் போது அமலாக்கத் துறை தகவல் அறிக்கை பதிவு செய்கிறது என செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்தது. அமலாக்கத் துறை காவலை எதிர்த்து தான் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர். சந்தேகத்தின் பெயரில் ஒரு நபரை போலீசார் கைது செய்வதை போல, அமலாக்கத் துறை கைது செய்ய முடியாது. என செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்தது.

 

The post அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: