மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் கார்கே பேசும்போது ஏன் மைக் அணைக்கப்பட்டது; யார் உத்தரவிட்டு மைக் அணைக்கப்பட்டது?: திருச்சி சிவா ஆவேசம்

டெல்லி: மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது மைக்கை அணைத்ததற்கு திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வலியுறுத்தி 5வது நாளாக எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். மணிப்பூர் கொடூரம் குறித்து மோடி பேச மறுப்பதால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து பேச வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே மாநிலங்களவையில் நேற்று பழங்குடியினர் சட்ட திருத்த மசோதாவின் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் எழுந்து பேச முயன்றனர். மல்லிகார்ஜுன கார்கேவின் மைக்கின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் அவரது பேச்சு சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் கேட்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது மைக்கை அணைத்ததற்கு திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார். கார்கே பேசும்போது ஏன் மைக் அணைக்கப்பட்டது; யார் உத்தரவிட்டு மைக் அணைக்கப்பட்டது என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். மைக் அணைப்பது போன்ற நடவடிக்கை எப்போதும் நடந்ததில்லை என்றும் திருச்சி சிவா கடுமையாக சாடினார். கார்கே பேசும்போது மைக் அணைக்கப்படவில்லை என்று மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் விளக்கம் அளித்தார்.

மல்லிகார்ஜூன கார்கேவின் ‛மைக்’ ஆப் செய்யப்பட்டதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஓபிரையன் உறுதி செய்தார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மைக் ஆப் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‛INDIA’ கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் வெளிநட்பு செய்தன. நாடாளமன்றம் இருண்ட அறையாக உள்ளது என தெரிவித்திருந்தார்.

 

The post மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் கார்கே பேசும்போது ஏன் மைக் அணைக்கப்பட்டது; யார் உத்தரவிட்டு மைக் அணைக்கப்பட்டது?: திருச்சி சிவா ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: