சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: நடப்பாண்டில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ளும் பொருட்டு, ஜூன் 12ம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் 5 லட்சம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பினை டெல்டா மாவட்ட விவசாயிகள் மேற்கொண்டனர். இருப்பினும், மேட்டூர் அணை நீர் வாய்க்கால்களுக்கும், கடைமடை பகுதிகளுக்கும் செல்லவில்லை. குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததன் காரணமாக பயிர்கள் கருகியுள்ளதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வழங்க வேண்டும் என்றும் இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வழங்கவும், கர்நாடகாவிடமிருந்து நீரை விரைந்து பெற்று எஞ்சிய பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post தண்ணீர் பற்றாக்குறையால் கருகிய பயிர்கள் ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.