சென்னை எழும்பூரில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பங்கேற்பு

சென்னை: சென்னை எழும்பூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாளுக்குநாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் , சாலை விபத்துகளை தடுப்பதற்காகவும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பள்ளியில் பயிலும் ஆர்எஸ்பி மாணவர்களை வைத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சியை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார். இதன் மூலாம் சென்னையில் அதிக வாகனங்கள் பயணிக்கும் முக்கிய சாலைகளிலும், பள்ளிக்கு அருகாமையில் உள்ள சாலைகளிலும் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபடுவர்.

இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், காரில் பயணம் செய்வோர் சீட்பெல்ட் அணிய வேண்டும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஊட்ட கூடாது, வாகனங்களில் வேகமாக செல்லக்கூடாது போன்ற விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பலூன்களை பறக்கவிட்டு சென்னை போக்குவரத்தை கடைபிடிக்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

The post சென்னை எழும்பூரில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: