கிருஷ்ணகிரியில் 3 ஏக்கர் நிலத்தில் தக்காளி, வெள்ளரி, வாழை பயிர்கள் சேதம்: காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி: தேன்கனி கோட்டை அருகே 3 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த தக்காளி, வெள்ளரிக்காய், வாழை உள்ளிட்ட பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகே அரசகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட லிங்கதீரனப்பள்ளியில் ரவி மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தில் தக்காளியும், ஒரு ஏக்கர் நிலத்தில் வெள்ளரியும், 50-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நட்டும் சாகுபடி செய்து வந்தனர். இவற்றை வனவிலங்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டி பயிர்களுக்கு சோலார் மின்வெளியும் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் காட்டு யானைகள் புகுந்து சோலார் மின்வேலியை சேதப்படுத்தியதுடன் தக்காளி, வெள்ளரிக்காய், வாழை பயிர்களை தும்சம் செய்து விட்டு சென்றுள்ளன. தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் அந்த பயிர்களை யானை சேதப்படுத்தி இருப்பது விவசாயிகளிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. சேதமான பயிர்களின் மதிப்பு சுமார் 13 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி கணேஷ் ரெட்டி உள்ளிட்டோர் சேதமான பயிர்களை பார்வையிட்டனர். இப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தவும் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கிருஷ்ணகிரியில் 3 ஏக்கர் நிலத்தில் தக்காளி, வெள்ளரி, வாழை பயிர்கள் சேதம்: காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: