திருத்தணியில் ஆட்சி மொழிக் கருத்தரங்கம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருத்தணியில் வரும் 27ம் தேதி ஆட்சி மொழிக் கருத்தரங்கம் நடக்கவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 27ம் தேதி ஆட்சிமொழிக் கருத்தரங்கம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. அரசு அலுவலர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் ஆகியோர் இக்கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளலாம்.

இந்த கருத்தரங்கம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 05.30 மணி வரை நடைபெறும். பங்கேற்பவர்களுக்குத் தேநீர், குடிநீர், மதிய உணவு, குறிப்பேடு, எழுதுகோல் ஆகியன வழங்கப்படும். இக்கருத்தரங்கில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post திருத்தணியில் ஆட்சி மொழிக் கருத்தரங்கம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: