காஞ்சிபுரத்தில் கள்ளச்சந்தையில் மது விற்ற 25 பேர் கைது; போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கள்ளச்சந்தையில் மது விற்ற 25 பேர் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக் கடை தற்போது மதியம் 12:00 மணிக்கு திறப்பதால் காலையில் சரக்கு தேடி பலர் அலைகின்றனர். இதனால் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு சில இடங்களில் மது விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே காஞ்சிபுரத்தில் நேற்று காலை முதலே கள்ளத்தனமான மது விற்பனையானது அமோகமாக நடைபெற்று வந்தது.

அரசு மதுபான கடை திறப்பதற்கு முன்பு, இரவே மதுபான பாட்டில்களை வாங்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வந்தது கள ஆய்வில் தெரியவந்தது. டாஸ்மாக் கடையில் இருந்து மதுபானங்கள் வாங்கி கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா? அல்லது சட்டவிரோதமாக மது தயாரித்து போலி ஸ்டிக்கர்கள் ஒட்டி விற்பனை நடைபெறுகிறதா என சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கள்ளச்சந்தையில் மது விற்ற 25 பேரை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. அவர்களிடம் இருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில் மட்டுமே கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post காஞ்சிபுரத்தில் கள்ளச்சந்தையில் மது விற்ற 25 பேர் கைது; போலீசார் அதிரடி நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Related Stories: