தமிழ்நாடு – ஆந்திரா – கர்நாடகாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை.. ஒன்றிய அமைச்சர் புது தகவல்

சென்னை : ரூ.1,160 கோடி மதிப்பீட்டில் சென்னை பெங்களூரு அதிவிரைவு சாலை மேம்படுத்தப்படுவதாக ஒன்றிய சாலை, போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிதின் கட்கரி ட்விட்டரில் செய்தி பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு – ஆந்திரா – கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் சென்னை – பெங்களூரு அதி விரைவு சாலையின் பெங்களூரு மாலூர் பகுதி, பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1,160 கோடி செலவில் மேம்படுத்தப்படுவதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த சாலை சென்னை ஸ்ரீபெரும்புதூர் , ராணிப்பேட்டை சித்தூர், வெங்கடகிரி கோலார், மாலூர் ஆகிய முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

நிகழ்வுத்தன்மை கொண்ட 3 அடுக்கு கட்டுமான தொழில்நுட்பத்தில் இந்த விரைவுச் சாலை அமைக்கப்படுவதாகவும் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், “ஹோஸ்கோட், மாலூர், பங்கார்பேட்டை, கோலார், வெங்கடகிரி, பலமநீர், பங்காருபாலம், சித்தூர், ராணிப்பேட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போன்ற முக்கிய நகரங்கள் இந்த வழித்தடத்தில் அடங்கும்.பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு முழுவதும் தடையற்ற, தொந்தரவில்லாத மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பான இயக்கம் அமைப்பை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான பயண நேரத்தை 6 மணி நேரத்தில் இருந்து வெறும் 2.15 மணி நேரமாகக் குறைக்கும் நோக்கம் கொண்டது. மேலும், பெங்களூரில் இருந்து சென்னையை ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி வழியாக இணைக்கும் தற்போதைய தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தை விட இது தோராயமாக 50 கி.மீ ஆகும்.,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. .

The post தமிழ்நாடு – ஆந்திரா – கர்நாடகாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை.. ஒன்றிய அமைச்சர் புது தகவல் appeared first on Dinakaran.

Related Stories: