சென்னை : சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இனி தங்கள் தாய் மொழியிலேயே மேல்நிலை கல்வி வரை பயிலலாம் என்ற அறிவிப்புக்கு வானதி சீனிவாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் , பாரத பிரதமர் திரு.மோடி அவர்கள் தமிழ் மொழி மீதும் மாநில மொழிகளின் மீதும் கொண்டிருக்கும் அளவற்ற மரியாதை மற்றும் அக்கறையின் விளைவாக CBSE பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இனி தங்கள் தாய் மொழியிலேயே மேல்நிலை கல்வி வரை பயிலலாம். இதனால் தமிழ் மொழி மற்றும் இந்தியாவின் பிற மொழிகளின் மூலம், கல்வி வலிமை பெரும். மாநில மொழிகள் மீதான பிரதமர் நரேந்திர மோடி
அவர்களின் அபிமானத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். இதன்மூலம் இந்தியா முழுவதும் உள்ள 7500 CBSE பள்ளிகளிலும் சுமார் 7500 தமிழாசிரியர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். CBSE பள்ளி மாணவர்களும் தமிழ் மொழி கற்கும் வாய்ப்பையும் பெறுவார்கள்! தமிழாசிரியர்களின் வேலை வாய்ப்பையும், மாணவர்களின் அறிவுத்திறனையும், படைப்பாற்றலையும், தாய் மொழி மீதான ஈடுபாட்டையும் வளர்க்கும் இந்த திட்டத்தை மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்! என்று பதிவிட்டுள்ளார்.
The post இனி தமிழ் மீடியத்திலும் சிபிஎஸ்இ பள்ளிகள் : பிரதமருக்கு வானதி சீனிவாசன் நன்றி appeared first on Dinakaran.