தேசிய ஹெலிகாப்டர் சேவை நிறுவனத்தை மீண்டும் ஒன்றிய அரசே ஏற்று நடத்தாதது ஏன்?: மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

புதுடெல்லி:‘பவன் ஹான்ஸ்’ நிறுவனத்தை மீண்டும் ஒன்றிய அரசே ஏற்று நடத்தாது ஏன் எனறு மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மக்களவையில் ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வி: ஹெலிகாப்டர் சேவைகளை வழங்கும் ‘பவன் ஹான்ஸ்’ நிறுவன தனியார்மயமாக்கல் நிறுத்தப்படுவதற்கான காரணங்கள் மற்றும் பங்கு விலக்கல் இலக்குகள் மீதான தாக்கம் என்ன? தனியார்மயமாக்குதலை நிறுத்துவது தொடர்பான முடிவை மேற்கொள்ளும்போது எந்தெந்த அமைச்சகங்கள் மற்றும் இத்துறை சார்ந்த அதிகாரிகள் யாரெல்லாம் பங்கு பெற்றார்கள்?
சம்பந்தப்பட்ட கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிரான தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் உத்தரவின் தாக்கம் என்ன என்றும் ‘‘பவன் ஹான்ஸ் ” லிமிடெட் நிறுவனத்தின் தனியார்மயமாக்குதலுக்காண அடுத்த கட்ட நடவடிக்கையை அரசாங்கம் எந்த விதத்தில் பார்க்கிறது.‘‘பவன் ஹான்ஸ்” நிறுவனத்தைத் தக்கவைத்து, அதனை புத்துயிரூட்டும் பணிகளைத் ஒன்றிய அரசே மேற்கொள்வது குறித்து அமைச்சகம் பரிசீலிக்குமா என்றும் அப்படியானால், அதன் விவரங்கள் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.

The post தேசிய ஹெலிகாப்டர் சேவை நிறுவனத்தை மீண்டும் ஒன்றிய அரசே ஏற்று நடத்தாதது ஏன்?: மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: