குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா: 22ம் தேதி தொடக்கம்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே, குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில், ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூர் சுரபி நதிக்கரையில் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இங்கு சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆடி மாதம் 5 சனிக்கிழமைகளிலும் ஆடிப்பெருந்திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

இந்தாண்டு ஆடிப் பெருந்திருவிழா வரும் 22ம் தேதி முதல் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா துவங்க உள்ளது. இந்நிலையில் திருவிழா துவங்குவதற்கு முன்பு கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. இருப்பினும் ஆடி மாதங்களில் சனிக்கிழமைகளில் தான் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இங்கு வரும் பக்தர்கள், சுரபி நதியில் நீராடி, புத்தாடை அணிந்து, காக்கைக்கு எள் சாதம் படைத்து, நல்லெண்ணெய் விளக்கேற்றி, கொடிமரத்துக்கு உப்பு, பொறி படைத்து வணங்குவர். தொடர்ந்து மூலஸ்தனத்தில் உள்ள சனி பகவானை வணங்கி வழிபடுவர்.

The post குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா: 22ம் தேதி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: