அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கதாந்த ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்திருந்தனர். இது தொடர்பாக அவர் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது மூன்றாவது நீதிபதியாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார், கார்திகேயனுடையே தீர்ப்பும் நீதிபதி வரதச்சக்கரவத்தியின் தீர்ப்பும் ஒத்துப்போனதை அடுத்து தீர்ப்பு உறுதி செய்யபப்ட்டிருந்தது.

இந்த சூழலில் ஆட்கொணர்வு மனு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, செந்தில் பாலாஜி தனது கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கின்ற சுழலில் தற்போது அவரது மனைவி மேகாலவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கின்றார்.குறிப்பாக தனது ஆட்கொணர்வுமனு அதாவது செந்தில் பாலாஜியை ஒப்படைக்கவேண்டும் சட்டவிரோதமாக கைது செய்திருக்கிறார்கள் எனவே அவரை விடுவிக்கவேண்டும் என்று கோரி அட்குணர்வுமனுவை தாக்கல் செய்திருக்கின்றார். அந்த ஆட்கொணர்வுமனு சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருக்கிறது.

முன்னதாக செந்தில் பாலாஜி என்னென்ன விவரங்களை எல்லாம் மேல்முறையீடு மனுவில் சுட்டிக்காட்டி இருந்தாரோ அதே விஷியங்களை அவரது மனைவி மேகலாவும் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக அமலாக்கத்துறைக்கு கைது செய்வதற்கான அதிகாரம் கிடையாது அவ்வாறு கைது செய்யப்பட்டபோதும் கூட அவர்கள் பின்பற்றி முறை என்பது சட்டவிதிகளுக்கு உட்பட்டவை கிடையாது உள்ளிட்ட விவரங்களை செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் மனுவில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ளவேண்டும் தனது கணவர் உடல் நிலை உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் மனுவில் மேகலா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி நீங்கள் கேட்டது போல செந்தில் பாலாஜிக்கு முன்பாக இருக்கக்கூடிய வாய்ப்பு என்று பார்த்தால் செந்தில் பாலாஜி தரப்பு மனு மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பு மனு ஆகியவற்றை மிக விரைவாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டுவர முயற்சி செய்வார்கள், ஏனென்றால் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தான் மூன்றாவது நீதிபதியை நியமித்து இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியை கைது செய்தது செரியானதா அல்லது தவறானதா என்பதை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன் அடிப்படையில் தான் மூன்றாவது நீதிபதி தீர்ப்பை வழங்கி இருந்தார், எனவே உச்சநீதிமன்றத்தில் விரைவாக இந்த வழக்கை கொண்டுவரும் பச்சத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு தங்களிடம் இருக்கின்றது, குறிப்பாக தற்போது செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே மூன்றாவது நீதிபதி இந்த மருத்துவமனையில் இருந்த காலமும் மற்ற நேரமும் அமலாக்கத்துறையினர் விசாரணை காலமாக கருத முடியாது என்று ஒரு வாதத்தை தெரிவித்திருந்தார். எனவே அவருக்கு சற்று உடல் நலம் தெரியாவுடன் தங்களது கஷ்ட்டடியில் எடுத்து விசாரிப்பதற்கான முயற்சிகளை அமலாக்கத்துறை மேற்கொள்ளும் எனவே வரும் வாரங்களில் இந்த வழக்கினை விரைவாக விசாரணைக்கு கொண்டுவருவதற்கு செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: