எகிப்து தலைநகரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; கட்டிட இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு..!!

எகிப்து தலைநகர் கெய்ரோவில் 5 மாடி அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். மத்திய கெய்ரோவின் வடக்கே உள்ள ஃபதாயக் எல்கோபா என்ற இடம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. ஏராளமான பழமையான வீடுகள் உள்ள இந்த பகுதியில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிடத்தில் வசித்த ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர் படுகாயம் அடைந்த 8 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post எகிப்து தலைநகரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; கட்டிட இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: