தமிழக ஆளுநரை திரும்ப பெற கோரி மதிமுகவினர் கையெழுத்து இயக்கம்

புழல்: தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி, மதிமுகவினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 32வது வார்டு மதிமுக சார்பில், நேற்று முன்தினம் புழல் அருகே, புத்தாகரம், விநாயகபுரம் பகுதிகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் புழல் ராஜேந்திரன் தலைமை தாங்கி, கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட பொருளாளர் செங்குன்றம் ஆனந்தன், மாவட்ட துணை செயலாளர் புழல் ராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் சேகர், புழல் பன்னீர்செல்வம், பகுதி செயலாளர் கோபி, பகுதி பொருளாளர் புத்தகரம் ரவிச்சந்திரன், வட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், திமுக சார்பில் கவுன்சிலர் ஏழுமலை, வட்ட செயலாளர் சரவணன், கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாதவரம் கமலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புத்தாகரம், விநாயகபுரம் மார்க்கெட், பேருந்து நிறுத்தம் உள்பட பல்வேறு பகுதிகளில் மதிமுகவினர் வீடு, கடை மற்றும் வணிக வளாகங்களுக்கு சென்று, ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி கையெழுத்து பெற்றனர்.

The post தமிழக ஆளுநரை திரும்ப பெற கோரி மதிமுகவினர் கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: