திருத்தணி: திருவள்ளூர் தேமுதிக மேற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் திருத்தணியில் நேற்று நடைபெற்றது. திருத்தணி நகர செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு ஆகியோர் வரவேற்றனர். திருத்தணி, திருவள்ளூர், பூவிருந்தவல்லி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர். கூட்டத்தில், மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் ராமு வசந்தனின் 14ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக கிருஷ்ணமூத்தி மீண்டும் நியமிக்கப்பட்டார். மாவட்ட அவைத் தலைவர் சரவணன், மாவட்ட பொருளாளர் லயன் சேகர், மாவட்ட துணை செயலாளர்கள் புஜ்ஜி முரளிகிருஷ்ணன், தியாகராஜன். சதீஷ் (எ) சத்தியநாராயணன், பார்வதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகர், ஞானமூர்த்தி, பொதுகுழு உறுப்பினர்கள் சசிகுமார், ரஜினிகாந்த், சுப்பிரமணி, வெங்கடேசுலு நாயுடு, கிருஷ்ணன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு தேமுதிக நிர்வாகிகள் மலர்மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 25ல் விஜயகாந்த் பிறந்தநாளை திருவள்ளூர் மேற்கு மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடி ஏழை எளியோருக்கு நல திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்றும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த, நெசவாளர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இலவச வேட்டி சேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாஸ்கர் ராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் மனோஜ், மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் பெருவை மு.பிரேம்குமார், கடம்பத்தூர் சுதாகர், தென்னரசு, கணபதி, ஸ்ரீதர், மணவாளன், முரளி, வெங்கடேசன், பாலாஜி, ராஜி, சுரேஷ், அரிபாபு, மாதவன், நகர செயலாளர்கள் மணிகண்டன், ஸ்ரீராம், பேரூர் செயலாளர்கள் பாலு, பழனி உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
The post திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் appeared first on Dinakaran.
