புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் 480 வீடுகள் புதுப்பிக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி சுனாமி குடியிருப்பு உள்ளது. இங்கு 960 வீடுகள் உள்ளன. இந்த கட்டிடம் 17 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய குடியிருப்பு நல சங்கத்தினர் ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ எபினேசரிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் முதற்கட்டமாக ரூ.1.91 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 480 வீடுகளை புதுப்பிக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. எம்எல்ஏ எபினேசர் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக பகுதிச் செயலாளர் லட்சுமணன், கவுன்சிலர் குமாரி நாகராஜ், சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை, நேரு நகர் பகுதியில் சென்னை மாநகராட்சி 41வது வார்டு கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் விமலாவின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் எம்எல்ஏ எபினேசர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதிச் செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், கவுன்சிலர் விமலா, திமுகவினர், பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் 480 வீடுகள் புதுப்பிக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: