உலக இளைஞர் திறமைகள் தினம்

திருப்போரூர், ஜூலை 16: சென்னையில் உள்ள முட்டுக்காட்டில் செயல்பட்டு வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் உலக இளைஞர் திறமைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனர் வசந்தி ராஜேந்திரன் கலந்துகொண்டு உலக இளைஞர் திறமைகள் தினம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், உலக இளைஞர் திறமைகள் தினம் 2014ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15ம்தேதி அனுசரிக்கப்படுகிறது.

இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: மாற்றுத்திறனாளி இளைஞர்களின் திறமைகள் குறித்து வேலை கொடுப்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மாற்றுத்திறனாளி இளைஞர்களை போட்டி தேர்வுகளுக்கு தாங்களாகவே தயார்படுத்த வழிவகை செய்வது, இளைஞர்களின் திறமைகள் மற்றும் திறன்களை மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பது மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் உலக இளைஞர் திறமைகள் தினத்தை கொண்டாடும் விதமாக ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகளுடைய இளைஞர்களின் வேலைவாய்ப்பினில் 21ம் நூற்றாண்டின் வேலைவாய்ப்பு திறன் இடைவெளியை குறைத்தல் என்ற தலைப்பில் மாற்றுத்திறனுடைய இளைஞர்களுக்கு பயிற்சி, சேவை வழங்குபவர்கள் மற்றும் வேலை கொடுப்பவர்களுக்கிடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியில் பி.ஞானசேகர், சங்கீதா, உளவியலாளர், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தொழில் சேவை மையம் ஜெயபாஸ்கரன், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி மேலாளர் சங்கர் சுப்பையா, நச்சிகேட்டா ரௌட், இயக்குனர் ஆ.அமர்நாத், துணை பதிவாளர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள், திறன்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குபவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post உலக இளைஞர் திறமைகள் தினம் appeared first on Dinakaran.

Related Stories: