பள்ளிக்கரணை சதுப்புநில சுற்றுச்சூழல் பூங்காவில் சதுப்பு நில பாதுகாப்பு மையம் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ்

சென்னை, பள்ளிக்கரணை சதுப்புநில சுற்றுச்சூழல் பூங்காவில் இன்று (14.07.2023) ராம்சார் தளம் மேம்பாட்டுப் பணிகளையும், ரூபாய். 60 கோடி மதிப்பில் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு நிதியில் அமைக்கப்படவுள்ள சதுப்பு நில பாதுகாப்பு மையம் திட்டப் பணிகளையும் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் 14 ராம்சார் தளங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளது. இவற்றை ஈரநில இயக்கம் திட்டத்தில் தமிழ்நாடு அரசு மிகவும் சிறப்பாக பராமரித்து வருகிறது.

இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பும், கார்பன் சமநிலைக்கும் ஒன்றிய அரசின் மிஷ்டி இயக்கம் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டங்களின் மூலம் கடற்கரை உவர்நிலங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்று தெரிவித்த மாண்புமிகு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ் அவர்கள் ரூபாய். 60 கோடி மதிப்பில் மாநிலஅரசு மற்றும் ஒன்றிய அரசு நிதியில் அமைக்கப்படவுள்ள சதுப்பு நில பாதுகாப்பு மையம் திட்டப் பணிகளையும் ஆய்வு செய்து, இத்திட்டத்தினால் சூழல் சுற்றுலா பயனிகளுக்கான அடிப்படை வசதிகளான டெலஸ்கோப், உயர்மட்ட கோபுரம், கூட்ட அரங்கம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி போன்றவை நவீன வசதிகளுடன் அமைக்க திட்டமிட்டுள்ளதை ஆய்வு செய்து சிறப்பாக அமைத்திட வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சுப்ரியா சாகு இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) சுப்ரத் மஹாபத்ர, இ.வ.ப, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ரா.ரெட்டி இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் முதன்மை இயக்குநர் தமிழ்நாடு பசுமை இயக்கம் தீபக் ஸ்ரீவஸ்தவா இ.வ.ப., சென்னை மண்டல தலைமை வனப் பாதுகாவலர் கௌ.கீதாஞ்சலி இ.வ.ப., மாவட்ட வன அலுவலர் ரவி மீனா இ.வ.ப., சென்னை வன உயிரின காப்பாளர் ஈ.பிரசாந்த் இ.வ.ப., மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பள்ளிக்கரணை சதுப்புநில சுற்றுச்சூழல் பூங்காவில் சதுப்பு நில பாதுகாப்பு மையம் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் appeared first on Dinakaran.

Related Stories: