முற்றோதல் போட்டியில் வெற்றி ஸ்ரீநிகேதன் பாடசாலை பள்ளி மாணவிகள் கலெக்டரிடம் வாழ்த்து

திருவள்ளூர்: வேடங்கிநல்லூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ நிகேதன் சிபிஎஸ்இ பாடசாலை பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவி இர.காவ்யா, 9ம் வகுப்பு மாணவி செ.லக்க்ஷனா ஆகியோர் சென்னையில் நடந்த மாநில அளவிலான திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்றனர். இதற்கான பரிசளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கினார்.

இந்நிலையில், மாணவிகள் இர.காவ்யா, செ.லக்க்ஷனா ஆகியோர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸை நேரில் சந்தித்து முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெற்ற பாராட்டு சான்றிதழினை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.நிகழ்ச்சியின்போது, ஸ்ரீநிகேதன் பள்ளிக் குழும தாளாளர் ப.விஷ்ணுச்சரண், இயக்குனர் பரணிதரன், முதல்வர் கிரிஜா, தமிழ் ஆசிரியர் அப்புன் உடனிருந்தனர். திருக்குறள் பயிற்சி ஆசிரியர் திருக்குறள் செம்மல் புலவர் க.செந்தில்குமார், ஸ்ரீ நிகேதன் பள்ளிக் குழுமத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திருக்குறள் பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்தார்.

The post முற்றோதல் போட்டியில் வெற்றி ஸ்ரீநிகேதன் பாடசாலை பள்ளி மாணவிகள் கலெக்டரிடம் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: