அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக்க நடவடிக்கை தனியார் ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

கரூர், ஜூலை 14: அத்தியாவசிய பொருட்கள் பதுக்கி வைக்கப்படுகிறதா? என்பது குறித்து தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினர் கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஆலைகளில் சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை தலைவர் காமினி உத்தரவின் பேரில், அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் எந்த பகுதியிலாவது பதுக்கல் குற்றங்கள் நடைபெறுகிறதா? மேலும், தனியார் குடோன்கள் மற்றும் பருப்பு ஆலைகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பொருட்கள் சட்டத்திற்கு விரோதமாக பதுக்கி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமை பொருள் வழஙகல் குற்றப்புலனாய்வு துறை தலைவர் எச்சரித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, கரூர் மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் தனியார் அரவை ஆலைகளில் முறைகேடுகள் எதுவும் நடைபெறுகிறதா? என்பது குறித்து திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தலைமையிலான காவல்துறையினர் பல்வேறு ஆலைகளில் சோதனை மேற்கொண்டனர்.

The post அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக்க நடவடிக்கை தனியார் ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: