பெங்களூரு விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுபாதையில் உரசியபடி இறங்கிய பயிற்சி விமானம்

பெங்களூரு: பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை பிரிமியர் 1ஏ ரக பயிற்சி விமானம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு இரண்டு பைலட்டுகளுடன் புறப்பட்டது. வானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் நோஸ் லேண்டிங் கேரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, உடனடியாக எச்ஏஎல் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம் இறங்கிய போது, திடீரென நிலை தடுமாறியதுடன் விமானத்தின் முன்பகுதி ஓடுபாதையில் உரசியது. அதிர்ஷ்டவசமாக விமானிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விமானம் அவசரமாக தரையிறங்கும் காட்சிகளை சிலர் மொபைல் போனில் பதிவு செய்தனர். இந்த வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

The post பெங்களூரு விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுபாதையில் உரசியபடி இறங்கிய பயிற்சி விமானம் appeared first on Dinakaran.

Related Stories: