தயார் நிலையில் இந்தியாவின் சந்திரயான்-3; நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்-3 விண்கலம் நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது. பூமியில் இருந்து 3,84,000 கி.மீ தொலைவில் உள்ள நிலவு குறித்து ஆய்வு செய்ய இஸ்ரோ அதிக தீவிரம் காட்டுகிறது. ஏற்கனவே சந்திராயன்-1, 2, ஆகிய விண்கலன்கள் விண்ணில் செலுத்தபட்டுள்ள நிலையில், தற்போது ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதேஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன்-3 விண்கலம் நாளை மறுநாள் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தபடுகிறது.

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கபட்டுள்ள LVM-3 M4 ராக்கெட் 640 ட எடை கொண்டது சந்திராயன்-3 விண்கலம் ராக்கெடில் இணைக்கபட்டு எரிபொருள் நிரப்பும் பணியும் நிறைவடைந்துள்ளது. தற்போது விண்ணில் ஏவ ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் ஏவும் போது எந்த பிரச்சையும் ஏற்படாமல் இருக்க கட்டமைப்பு, கணினிகள், மென்பொருள் மற்றும் சென்சார்களில் திருத்தங்கள் செய்யபட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

நாளை மறுநாள் ஏவபடும் சந்திராயன்-3 விண்கலம் ஆகஸ்ட் 23 அல்லது 24-ம் தேதி நிலவில் லெண்டரை தரையிறக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

The post தயார் நிலையில் இந்தியாவின் சந்திரயான்-3; நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது appeared first on Dinakaran.

Related Stories: