அழிசூர் அருளாலீஸ்வரர் கோயிலை புனரமைக்க கோரிக்கை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே அழிசூர் கிராமத்தில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் அகிலாண்டேஸ்வரி உடனுறை அருளாலீஸ்வரர் கோவில் உள்ளது. அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த கோயிலுக்கு முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் நேரில் வருகை தந்தார். சுவாமியை தரிசித்து விட்டு, கோயிலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘அழிசூர் சிவன் கோவில் தொன்மையானது. தற்போது, அழியும் நிலையில் உள்ளது. உடனடியாக புனரமைக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது அரசியலுக்கு வந்துள்ள இளைஞர்கள் ஆன்மீகத்தில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு பணிகளை மேற்கொண்டாலே தாங்கள் நல்ல நிலையை அடைவீர்கள் என்றார். பின்னர் கிராம மக்களிடம் கோயில் குறித்து கேட்டறிந்தார். அப்போது, இந்த கோயிலை புனரமைப்பது தொடர்பாக அறநிலைய துறை அமைச்சரிடமும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அறநிலைய துறை அலுவலர்களுக்கு கோயில் வருமானமே சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. எனினும் இது போன்ற தொன்மையான கோயில்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அழிசூர் அருளாலீஸ்வரர் கோயிலை புனரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: