ரஷ்ய படையெடுத்து 500வது நாள்; உக்ரைன் வெற்றி பெறும்: அதிபர் ஜெலன்ஸ்கி சூளுரை

கிவ்: ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் பகுதிகளை மீட்போம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சூளுரைத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து நேற்றுடன் 500 நாட்கள் நிறைவடைந்து விட்டன. இந்நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “ரஷ்யாவுக்கு எதிரான போரில் கடந்த 500 நாட்களாக உக்ரைனுக்காக போராடி வரும் ராணுவ வீரர்களுக்கும், மற்ற அனைவருக்கும் என் நன்றி.

இந்த போரில் உயிர் நீத்த அனைவருக்கும் என் அஞ்சலி. இந்த போர் உக்ரைன் தான் இழந்த பகுதிகளை மீட்டெடுக்கும் என்பதற்கு சான்று. உக்ரைனின் சுதந்திரம் இப்போதே வென்றெடுக்கப்பட வேண்டும். நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்று சூளுரைத்தார்.

ரஷ்யா ஆயுதக்கிடங்கு குண்டு வீசி அழிப்பு
உக்ரைன் நாட்டில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த ராணுவ கிடங்கை, தகர்த்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து உக்ரைன் ராணுவ தரப்பு கூறுகையில், மகிவ்கா பகுதியில், ரஷிய ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள ஆயுதகிடங்கு குண்டு வீசி வெற்றிகரமாக தகர்க்கப்பட்டது என்று தெரிவித்து உள்ளனர்.

The post ரஷ்ய படையெடுத்து 500வது நாள்; உக்ரைன் வெற்றி பெறும்: அதிபர் ஜெலன்ஸ்கி சூளுரை appeared first on Dinakaran.

Related Stories: