புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

 

ஈரோடு, ஜூலை 8: கருமாண்டிசெல்லிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்குட்பட்ட தோப்புபாளையம் அரசு உயர்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புகையிலை எதிர்ப்பு மற்றும் உலக விலங்கின நோய்கள் தின விழிப்புணர்வு முகாம், பேரணி நடந்தது. தோப்புபாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் துவங்கிய பேரணியானது பெருந்துறை சாலை வழியாக சென்று மீண்டும் பள்ளிக்கு வந்தனர்.

புகையிலை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதோடு புகையிலை பொருட்களால் ஏற்படும் தீங்கு, விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள், வீட்டு விலங்குகளை சரியான முறையில் தடுப்பூசி செலுத்தி பராமரித்தல், விலங்குகளை வளர்க்கும் பகுதியை பராமரித்தல், இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்பு, வளரிளம் பெண்களுக்கான உணவு பழக்கங்கள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலக மாவட்ட புகையிலை தடுப்பு நல ஆலோசகர் கலைச்செல்வி, சமூக சேவகர் சங்கீதா, ஆலேசாகர்கள் செந்தில்குமார், கபில் உட்பட பலர் பங்கேற்றனர்.

The post புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: