ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் உட்பட 3 பேரை கைது செய்தது சிபிஐ

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் உட்பட 3 பேரை கைது செய்தது சிபிஐ. ரயில்வே மூத்த பொறியாளர் அருண்குமார் மொஹந்தா, பொறியாளர் முகமது அமீர்கான், டெக்னீசியன் பப்பு குமார் உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த மாதம் ஜூன் 2ஆம் தேதி ஒடிசா மாநிலம் பால்சோர் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மோதிய விபத்தில் 291 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 800க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த கோர ரயில் விபத்து ரயில்வே விபத்தில் ஏற்பட்ட மிக பெரிய விபத்துகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் 291 பேர் பலியான ஒடிசா டிரிபிள் ரயில் விபத்தில் தற்பொழுது 3 ரயில்வே அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது. மூத்த பிரிவு பொறியாளர் அருண் குமார் மொஹந்தா, பிரிவு பொறியாளர் முகமது அமீர் கான் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பப்பு குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐபிசியின் 304 மற்றும் 201 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாககைது செய்ததாக செய்தி நிறுவனம் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

The post ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் உட்பட 3 பேரை கைது செய்தது சிபிஐ appeared first on Dinakaran.

Related Stories: