சாணார்பட்டி அருகே கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா

கோபால்பட்டி : சாணார்பட்டி அருகே பெரியகுளம் கண்மாயில் நடந்த மீன்பிடி திருவிழாவில் கிராம மக்கள் ஆர்வமுடன் மீன்களை பிடித்தனர்.திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே புகையிலைப்பட்டி கிராமத்தில் பெரியகுளம் கண்மாய் உள்ளது. இக்குளம் பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக நிரம்பியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் ரூ.10 ஆயிரம் மதிப்பில் மீன் குஞ்சுகளை வாங்கி குளத்தில் விட்டனர். மீன்கள் நன்கு வளர்ந்த நிலையில் குளத்தில் தண்ணீர் வற்றியதையடுத்து நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது.

ஊர் வழக்கப்படி புனித செபஸ்தியார் கோயிலில் இருந்து ஊர் நாட்டாண்மை சூசை மாணிக்கம் தலைமையில் கிராம மக்கள் புறப்பட்டு பெரியகுளம் கண்மாய் வந்தனர். தொடர்ந்து அங்குள்ள கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்த பின் மீன்பிடி திருவிழா துவங்கியது. வலை உட்பட பல்வேறு உபகரணங்களை கொண்டு போட்டி போட்டுக் ெகாண்டு மீன்களை பிடித்தனர். அயிரை, கட்லா, ரோகு, விரால் என சுமார் 10 கிலோ எடையுள்ள மீன்கள் வரை பிடிபட்டன. பின்னர் கிராம மக்கள், கிடைத்த மீன்களை மகிழ்ச்சியுடன் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர்.

The post சாணார்பட்டி அருகே கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: