கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை..! அதிர்ச்சியில் காவல்துறையினர்!!

கோவை: தமிழக மாநிலம் கோவை சரக காவல்துறை டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக காவல்துறையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பவர் விஜயகுமார். தேனி மாவட்டத்தைப் பின்னணியாக கொண்ட இவர் 2009 ல் ஐ.பி.எஸ் பேட்ஜில் பணியில் சேர்ந்தவர் ஆவார். நீட் தேர்வு மற்றும் சிவசங்கர் பாபா வழக்குகளில் சிறப்பு விசாரணை நடத்தியவர். காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூரில் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த விஜயகுமாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் கோவை டி.ஐ.ஜி யாக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், இன்று காலை திடீரென தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 2 தினங்களாக தூக்கம் வராமல் விஜயகுமார் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட அவரை சக போலீஸார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது தற்கொலைக்கான காரணம் பணிச்சுமையா அல்லது குடும்ப பிரிச்சினையா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். பல்வேறு வழக்குகளை திறமையாகக் கையாண்டு குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் டிஐஜி விஜயகுமார் கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை..! அதிர்ச்சியில் காவல்துறையினர்!! appeared first on Dinakaran.

Related Stories: