நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு: எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

டெல்லி: உள்துறை அமைச்சகம் பற்றிய நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிந்டப்பு செய்தனர்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா், குகி பழங்குடியினா் இடையே கடந்த இரு மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். நிலைமையை முழுவதும் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினருடன் மணிப்பூர் ரைபிள் படையினர், சிஏபிஎஃப், ராணுவ வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.

மாநிலத்தில் நீடிக்கும் தொடர் வன்முறைக்கு மத்தியிலும் நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் பள்ளிக்கு வெளியே பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லபட்டார்.

இந்த நிலையில், உள்துறை அமைச்சகம் பற்றிய நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். நிலைக்குழுவின் தலைவர் பாஜக எம்.பி பிரிஜ்லால் அனுமதி மறுத்தார். இதனை தொடர்ந்து மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிந்டப்பு செய்தனர்.

The post நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு: எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Related Stories: