காலதாமதம் ஆனாலும் நீதியும், தருமமும் வென்றுள்ளது!: ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பு குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து..!!

சென்னை: காலதாமதம் ஆனாலும் நீதியும், தருமமும் வென்றுள்ளது என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாக்காளர் மிலானி என்பவர் தொடுத்த வழக்கில் நீதிபதி சுந்தர் தீர்ப்பு வழங்கினார். இந்நிலையில், ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், நாட்டில் ஜனநாயகம் சாகவில்லை என்பதற்கு இத்தீர்ப்பு எடுத்துக்காட்டு. வாக்குப்பெட்டிகளை மாற்றியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை செய்து ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டு வர 3 ஆண்டுகள் ஆனது; சட்ட விரோதமான காரியங்கள் தேர்தலின் போது நடைபெற்றது; காலதாமதமானாலும் நீதி கிடைத்துள்ளது. எதை செய்தும் வெற்றி பெற்றுவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள், ஆனால் முடிவில் இப்படிதான் தீர்ப்புகள் வரும், அதை தாங்கிக் கொள்ளும் சக்தி அவர்களுக்கு வேண்டும்.

உண்மை தோற்பதில்லை என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டு; உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நான் முழு மனதோடு வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தேனி நாடாளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத்தை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காலதாமதம் ஆனாலும் நீதியும், தருமமும் வென்றுள்ளது!: ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பு குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: