இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதலமைச்சர் கோப்பைக்கான மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டி திருவள்ளூரில் நடந்தது. இதில் பங்கேற்ற அப்பாஸ் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்பாசுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கமலா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருகின்றனர். எனவே தேசிய, மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று அவன் தங்கம் வெல்வான் என்று அவரது பெற்றோர் நம்பிக்கை தெரிவித்தனர்.
The post முதலமைச்சர் கோப்பை போட்டியில் தங்கம் வென்றார் மாற்றுத்திறனாளி மாணவன் appeared first on Dinakaran.
