இந்நிலையில் உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் நேற்றுமுன்தினம் திடீரென ஐதராபாத்சென்று முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்து பேசினார். அப்போது தெலங்கானாவில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசித்துள்ளனர். பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அகிலேஷ் கேட்டுக்கொண்டார். அதற்கு சந்திரசேகரராவ், காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து 3வது அணியை உருவாக்கி தேர்தல்களை எதிர்கொள்ள உள்ளதாக கூறியதாக பிஆர்எஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
The post பாஜவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு அகிலேஷ் அழைப்பு appeared first on Dinakaran.
