கொடைக்கானல் தூண் பாறை பகுதியில் வனத்திலிருந்து வருவது போல யானை சிலைகள் வடிவமைப்பு: சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் தூண் பாறை பகுதியில் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ள யானை சிலைகளை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வார மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். சுற்றுலாப்பயணிகளை கவரும்விதமாக கொடைக்கானலில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது, கொடைக்கானல் பிரதான சுற்றுலா பகுதியான வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண்பாறை பகுதியில், யானைகள் வனப்பகுதியில் இருந்து வருவது போன்ற சிலைகள் மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

உண்மையான யானைகளை போலவே உள்ள இந்த சிலைகளை, சுற்றுலாப்பயணிகள் ஆர்வமாக கண்டு ரசிப்பதுடன் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்கின்றனர். மேலும் தூண்பாறை நுழைவாயில் பகுதியில் இயற்கை சார்ந்த ஓவியங்கள் சுவரில் வரைய இருப்பதாகவும், தொடர்ந்து சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டு வருவதாகவும் கொடைக்கானல் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post கொடைக்கானல் தூண் பாறை பகுதியில் வனத்திலிருந்து வருவது போல யானை சிலைகள் வடிவமைப்பு: சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Related Stories: