ரூ.1 கோடிக்கு ஏலம் போன செம்மறி ஆடு: விற்க மறுத்த உரிமையாளர்

இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம். அதன்படி இஸ்லாமியர்கள் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்வார்கள். இதற்காக சிறப்பு சந்தைகள் போடப்பட்டு ஆடுகள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு ஒரு செம்மறி ஆடு ரூ.1 கோடி வரை ஏலம் போகியும் அதை விற்க உரிமையாளர் மறுத்துவிட்டார்.

ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜூசிங். ஆடு மேய்கும் தொழிலாளியான இவர், செம்மறி ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த ஆட்டின் வயிற்று பகுதியில் உருது வாசகம் ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர், அந்த கிராமத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களுடன் கலந்து ஆலோசித்தபோது செம்மறி ஆட்டின் உடலில் 786 என்ற எண்கள் காணப்பட்டது தெரியவந்தது. இந்த எண்கள் இஸ்லாமிய மதத்தின் புனித எண்ணாக கருதப்படுகிறது. பக்ரீத்தையொட்டி இந்த செம்மறி ஆட்டை ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கூட கொடுத்தும் வாங்க சிலர் முன்வந்தனர். ஆட்டின் உடலில் புனித எண் இருப்பதை அறிந்த உரிமையாளர் ஆட்டை விற்க மறுத்தார். தற்போது அந்த ஆட்டிற்கு தினமும் மாதுளை, பப்பாளி, தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் கொடுத்து சிறப்பாக கவனித்து வருகின்றனர். இது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post ரூ.1 கோடிக்கு ஏலம் போன செம்மறி ஆடு: விற்க மறுத்த உரிமையாளர் appeared first on Dinakaran.

Related Stories: