தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவு: சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

சென்னை: டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெற உள்ள நிலையில் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர் வகித்த சென்னை காவல் ஆணையர் பதவிக்கு சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். 1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக ஆனவர் சங்கர் ஜிவால். கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட சங்கர் ஜிவால் சுமார் 3 ஆண்டு காலமாக பதவியில் இருந்தார். ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படையின் தலைவராகவும் இருந்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் அல்மோராவை பூர்வீகமாக கொண்ட சங்கர் ஜிவால், சேலம், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்துள்ளார். மேலும் ஒன்றிய அரசின் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு மண்டல தலைவராகவும், உளவுத்துறை ஐஜியாகவும் இருந்தவர் சங்கர் ஜிவால். 2007-ல் சிறந்த காவல் சேவைக்கான காவலர் பதக்கமும், 2019-ல் குடியரசுத் தலைவர் காவல் பதக்கமும் சங்கர் ஜிவால் பெற்றுள்ளார். 2004 முதல் 2006 வரை தென்மண்டல போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார்.

The post தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவு: சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: