குருவாயூர் கிருஷ்ணன் கோயில் தேவஸ்தான யானைகளுக்கு யானை ஊட்டு விழா

பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணன் கோயில் தேவஸ்தான யானைகளுக்கு நேற்று தேவஸ்தானத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள் ஒருங்கிணைந்து யானை ஊட்டு விழாவை நடத்தினர். கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயில் தேவஸ்தான வளர்ப்பு யானைகள் குருவாயூர் அருகேயுள்ள புணத்தூர் கோட்டையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குருவாயூர் கிருஷ்ணன் கோயில் தேவஸ்தானத்தில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற ஊழியர்கள் ஒருங்கிணைந்து தேவஸ்தான யானைகளுக்கு யானை ஊட்டு விழாவை நேற்று நடத்தினர். விழாவுக்கு ஒருங்கிணைப்பாளர் விஜயன் தலைமை தாங்கினார்.

ஓய்வுபெற்ற தேவஸ்தான ஊழியர் சிவதாஸ், புணத்தூர் கோட்டை யானை பராமரிப்பு மேலாளளர் மாயாதேவி, மூத்த யானை பாகன் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். பின்னர் வளர்ப்பு யானை ஜூனியர் விஷ்ணுவிற்கு சாப்பாடு உருளை வழங்கி யானை ஊட்டு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஓய்வுபெற்ற தேவஸ்தான ஊழியர்கள் 41 வளர்ப்பு யானைகளுக்கு சாப்பாடு உருளை, வாழைப்பழங்கள், வெள்ளரி, தர்பூசணி, கரும்பு ஆகியவற்றை வழங்கினர். விழாவில், ஓய்வுபெற்ற தேவஸ்தான ஊழியர்கள் சங்கரநாராயணன், ராஜாகோபாலன், சோமசுந்தரன், சுனில்குமார், மோகன்தாஸ், கிருஷ்ணதாஸ், திவாகரன், குஞ்சு, சங்கர், பவித்ரன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

The post குருவாயூர் கிருஷ்ணன் கோயில் தேவஸ்தான யானைகளுக்கு யானை ஊட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: