சென்னை : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை சென்ட்ரல் – திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலி – சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 28/06/2023 (புதன்கிழமை) இரவு 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயிலானது சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலிக்கு (வியாழக்கிழமை) காலை 11.45 மணிக்கு வந்து சேரும்.
மறுமார்க்கம் 29/06/2023 (வியாழக்கிழமை) மதியம் 3 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்படும் ரயிலானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு வந்தடையும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
The post பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்ட்ரல் – நெல்லை சிறப்பு ரயில்… முன்பதிவு தொடங்கியது!! appeared first on Dinakaran.