உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டி: வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது ஜிம்பாப்வே

ஹராரே : ஐசிசி உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் 13வது போட்டியில் நேற்று ஜிம்பாப்வே-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜாய்லார்ட் கும்பி கேப்டன் கிரேக் எர்வின் நிதானமான ஆடினர். ஆட்டத்தின் 15.3 ஓவரில் அணியின் ஸ்கோர் 63 ஆக இருந்தபோது கும்பி அவுட் ஆனார். அடுத்து வந்த வெஸ்லி மாதவரே 2 ரன்னிலும் சீன் வில்லியம்ஸ் 23 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த சிக்கந்தர் ராசா 68 ரன்னும் ரியான் பர்ல் 50 ரன்னும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப இறுதியில் 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஜிம்பாப்வே அணி 268 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கீமோ பால் 3 விக்கெட்டு வீழ்த்தினார். வெஸ்ட்இண்டீஸ் 269 ரன் இலக்கை துரத்தியது. ஜிம்பாப்வே பந்துவீச்சில் ரன் குவிக்க முடியாமல் வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் திணறினர். கிங் 20 சார்லஸ் 1 மேயர்ஸ் 56 ஹோப் 30 என அடுத்தடுத்து அவுட்டாகினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பூரன் 34 ரன்னில் அவுட்டாக ரோஸ்டன் ஷேஸ் கடைசி வரை போராடி 44 ரன் எடுத்தார். 44.4 ஓவரில் 233 ரன்னுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட்டானது. 35 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.

68 ரன் மற்றும் 2 விக்கெட் வீழ்த்திய சிக்கந்தர் ராசா ஆட்டநாயகன் விருது பெற்றார். நேபாளத்தை வென்ற நெதர்லாந்து: ஐசிசி உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் 14வது போட்டியில் நேற்று ஏ பிரிவில் உள்ள நேபாளம்-நெதர்லாந்து அணிகள் மோதின. தகசின்கா ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. நேபாள அணி 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணியின் லோகன் வாக் பீக்கின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ெதாடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நெதர்தலாந்து அணி 27.1 ஓவர்களில் 168 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றிபெற்றது. 90 ரன்கள் எடுத்த ஓ-டவுட் ஆட்டநாயகன் விருது பெற்றார். உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் இதுவரை 3போட்டிகள் விளையாடியுள்ள நெதர்லாந்து அணி 2 வெற்றிகள் பெற்று 4 புள்ளிகளுடன் ஏ பிரிவில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.

The post உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டி: வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது ஜிம்பாப்வே appeared first on Dinakaran.

Related Stories: