யானை மோதலில் வாயில் காயம் பாகுபலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டம்: 2 கும்கிகள் வரவழைப்பு

மேட்டுப்பாளையம்: யானை மோதலில் வாயில் காயம் ஏற்பட்ட பாகுபலிக்கு இன்று மயக்க ஊசி செலுத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் பாகுபலி யானையை 6க்கும் மேற்பட்ட குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். நேற்று 3வது நாளாக வனத்துறையினர் உளிக்கல், சுண்டப்பட்டி ஆகிய இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருந்து விஜய், வசீம் என்ற 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டு இங்குள்ள மரக்கிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வனத்துறையினருக்கு உதவியாக கோவை சாடிவயல் முகாமிலிருந்து மோப்ப நாய்கள் பைரவா, வளவன் ஆகியவை ஈடுபட்டுள்ளன.இந்நிலையில், நேற்று காலை நெல்லித்துறையில் யானை முகாமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் 4 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்றனர். ஆனால், அது சமவெளிப்பகுதிக்கு வராமல் போக்கு காட்டியது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: பாகுபலியின் வழித்தடங்களில் வாயில் உள்ள காயத்தை ஆற்றும் வகையில் அதற்குப்பிடித்தமான பழங்களில் மருந்து, மாத்திரைகளை கலந்து வைத்துள்ளோம். வனத்துறையினர் அருகே சென்றால் அங்கிருந்து வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகிறது. சமவெளி பகுதிக்கு பாகுபலி யானை வந்தவுடன் அதற்கு மருத்துவர்கள் மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட உள்ளது. அதன்பின், காயத்தின் தன்மைக்கு ஏற்ப லேசான காயம் என்றால் உரிய சிகிச்சை அளித்துவிட்டு வனப்பகுதியிலேயே விடுவிக்கப்படும். பெரிய அளவிலான காயம் என்றால் முதுமலை அல்லது டாப்சிலிப் வரகளியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து வன கால்நடை மருத்துவர் சுகுமார் கூறுகையில், சமூக வலைத்தளங்களில் அவுட் காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு வெடித்து பாகுபலி யானையின் வாயில் காயம் ஏற்பட்டது என பொய்யான தகவல் வெளியாகி வருகிறது. உண்மையில் இரு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே பாகுபலி யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டது. இன்று காலைக்குள் பா திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த ஒருவர், தலைமையாசிரியரை சந்தித்து சிஇஓ கொடுத்த கடிதம் எனக் கூறி ஒரு கடிதத்தை காட்டி பள்ளி மாணவ, மாணவிகளிடம் மேஜிக் புத்தகம், காகித கலைப்பொருட்கள் விற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தலைமையாசிரியர் தகவலையடுத்து சிஇஓ நசாருதீன் இதுபற்றி திண்டுக்கல் நகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த பள்ளிக்கு சென்று, அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் புதுடெல்லியை சேர்ந்த மேக்ராஜ்ராய் (62) என்பதும், தனியார் விடுதியில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. புதுடெல்லியைச் சேர்ந்த ரோஹித்ராய் (22), சமன்பாய் (22), அஜய்ராஜ் (23), மகேந்திரராய் (30) ஆகியோரும் மோசடியில் ஈடுபட்டதாக கூறினார்.
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக அறிவிப்பு பலகையில் அவரது கையெழுத்தை ஸ்கேன் செய்து, போலி கடிதம் தயார் செய்ததாகக் கூறினர். 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். குபலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

The post யானை மோதலில் வாயில் காயம் பாகுபலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டம்: 2 கும்கிகள் வரவழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: