பொது அமைதி பாதித்தால் மட்டுமே குண்டர் சட்டம்… தேவையின்றி பயன்படுத்த வேண்டாம்.. தமிழக டிஜிபிக்கு கடிதம்!

சென்னை : பொது அமைதி பாதிக்கப்படும் சூழலில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார்.அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் பெரும்பாலான வழக்குகளில் குண்டர் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. குண்டர் சட்டத்தை தேவையில்லாமல் பயன்படுத்தக்கூடாது என மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி அறிவுறுத்த வேண்டும்.பொது அமைதி பாதிக்கப்படும் சூழலில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்.

கடும் குற்றம், பொது ஒழுங்கை முற்றிலும் மீறுவோர் மீது மட்டுமே குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் உட்படுத்த பரிந்துரைக்கும் முன் காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இதனால், மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பிக்கும் தடுப்பு காவல் ஆணைகள் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யும் வாய்ப்பு குறையும் என உறுதி செய்வதுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உயர்நீதி மன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நிவாரண தொகை வழங்குவதும் தடுக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பொது அமைதி பாதித்தால் மட்டுமே குண்டர் சட்டம்… தேவையின்றி பயன்படுத்த வேண்டாம்.. தமிழக டிஜிபிக்கு கடிதம்! appeared first on Dinakaran.

Related Stories: