திருப்பதி மலையில் சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை புலி சிக்கியது: அடர்வனப்பகுதியில் விட ஆந்திர வனத்துறை முடிவு

ஆந்திரா: திருப்பதி மலைப்பாதையில் 3 வயது சிறுவனை கவ்விச் சென்று தாக்கிய சிறுத்தை புலியை வனத்துறை அதிகாரிகள் கூடு வைத்து பிடித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் அலிபிரி மலைப்பாதையில் நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த குடும்பத்தினர் நடந்து சென்றனர். அதில் தந்து தாத்தாவுடன் சென்று கொண்டிருந்த கௌசிக் என்ற 3 வயது சிறுவனை பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில் அருகே சிறுத்தை புலி ஒன்று கழுத்தை கவ்வியவாறு வனப்பகுதியில் ஓடியது.

அங்கிருந்த போலீசார் கடை வியாபாரிகள், பக்தர்கள் சத்தம் போட்டு செல்போனில் லைட் வெளிச்சம் காண்பித்து கத்தினர். இதனையடுத்து சிறுவனை 200 மீட்டர் இழுத்து சென்ற சிறுத்தை புலி வனப்பகுதியில் விட்டுவிட்டு சென்றது. நல்வாய்ப்பாக சிறுத்தை புலியிடம் இருந்து தப்பிய சிறுவன் மீட்கப்பட்டான். உடனடியாக சிறுத்தை புலியை பிடிப்பதற்கு வனத்துறையினர் 150 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கூடு வைத்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை வனத்துறையின் கூண்டில் சிறுத்தை புலி சிக்கியதால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர். பிடிபட்ட சிறுத்தை புலியை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அடர் வனப்பகுதியில் விட வனத்துறை முடிவு செய்துள்ளது.

The post திருப்பதி மலையில் சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை புலி சிக்கியது: அடர்வனப்பகுதியில் விட ஆந்திர வனத்துறை முடிவு appeared first on Dinakaran.

Related Stories: