பொன்னேரி ஜமாபந்தியில் 546 குடும்பங்களுக்கு பட்டா கேட்டு கோரிக்கை

பொன்னேரி: பொன்னேரி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில்546 குடும்பங்களுக்கு பட்டா கேட்டு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி உட்பட்ட பொன்னேரி சோழவரம் மீஞ்சூர் பழவேற்காடு உட்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா நிலம் ஆக்கிரமிப்பு, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெற கடந்த 6ம் தேதி ஜமாபந்தி மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று அத்திப்பட்டு ஊராட்சியில் ஊராட்சிக்கு தேவையான வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பு ஆகற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் மனுவாக கொடுத்தனர்.

இதில், அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் வசிக்கும் 546 குடும்பங்களுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்ததன்பேரில் மாவட்ட கலெக்டர் உத்திரவின்படி பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகளை கணக்கெடுத்து ஆய்வு செய்தனர். அவர்களுக்கு உடனடியாக வீட்டுமனைப்பட்டா கோரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.டி.ஜி கதிர்வேல் வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாகிகளுடன் கோரிக்கை மனுக்களை கொடுத்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் விரைவில் அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார்.

The post பொன்னேரி ஜமாபந்தியில் 546 குடும்பங்களுக்கு பட்டா கேட்டு கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: