பள்ளி மாணவர்களுக்கு தீவிபத்து பாதுகாப்பு விழிப்புணர்வு

 

துவரங்குறிச்சி, ஜூன் 22: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, தொண்டு நிறுவனம் சார்பில் தீ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு. அளிக்கப்பட்டது. மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வளநாடு மற்றும் கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வேர்ல்ட் விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் மூலம் நேற்று தீ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு. அந்தந்த பள்ளி வளாகத்தில் அளிக்கப்பட்டது.

நிறுவன மேலாளர் செல்வின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 685 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இதில் திருச்சி ஷாம் பாடசாலை நிறுவனர் அருள்மொழி தீ ஏற்படும் வகைகள், காரணிகள், பாதுக்காப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து மாணவ மாணவியர்களுக்கு விளக்கமளித்து செயல்முறை செய்து காண்பித்தார். நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன மேலாளர் திலகா, ஜேம்ஸ் மற்றும் வேர்ல்ட் விஷன் இந்தியா களப்பணியாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை டென்னிஸ்ராஜ் ஒருங்கிணைத்திருந்தார்.

The post பள்ளி மாணவர்களுக்கு தீவிபத்து பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: