அதிமுகவுக்கு குழி வெட்டுகிறது பாஜ திருமாவளவன் பேட்டி


சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு மட்டும் இன்றி தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைப்பதற்காக மதிமுக துவங்கியிருக்கும் கையெழுத்து இயக்கம் வரவேற்கத்தக்கது.

அதிமுகவை ஓரம் கட்டுவது தான் பாஜகவின் முதல் வேலை, தாங்கள் தான் எதிர்க்கட்சி என்று காட்டிக் கொள்ள பாஜக நினைக்கிறது. இது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் போன்றவர்களுக்கு தெரியவில்லை. பாஜ குழி வெட்டுவது திமுகவிற்கு அல்ல அதிமுகவிற்கு. அவர்கள் விழிப்போடு இருந்தால் சிறிது காலத்திற்கு கட்சியை நடத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுகவுக்கு குழி வெட்டுகிறது பாஜ திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: