100 ஆண்டு பழமையான முல்லை பெரியார் அணை உறுதியாக இல்லை.. நில அதிர்வு ஏற்பட்டால் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் : உச்சநீதிமன்றத்தில் மனு!!

டெல்லி : முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் ஒன்றிய நீர்வள ஆணையத்தின் அறிக்கைக்கு பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கோரியுள்ளது. முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை அதிகரிப்பதற்கு எதிராக ஜோசப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஒன்றிய நீர்வள ஆணையம் கடந்த 14ம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்தது. அதில் அணை உறுதியாக உள்ளது என்ற வாதம் சரியானது என்றும் 144 அடி தண்ணீர் தேங்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மனுதாரர் ஜோசப் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், நீர்வளத்துறை ஆணையத்தின் அறிக்கை தொழில்நுட்ப ரீதியாக தவறாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். 100 ஆண்டுகள் பழமையான அணையில் கடந்த 3 ஆண்டுகளாக முல்லைப்பெரியாறு பகுதிகளில் மழை அதிகமாக பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும் நில அதிர்வு ஏற்பட்டு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் 35 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். எனவே நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், கேரள அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நீர்வளத்துறை ஆணையத்தின் அறிக்கை மீது பதில் மனு தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் வேண்டும் என கேரள அரசு கோரியுள்ளது….

The post 100 ஆண்டு பழமையான முல்லை பெரியார் அணை உறுதியாக இல்லை.. நில அதிர்வு ஏற்பட்டால் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் : உச்சநீதிமன்றத்தில் மனு!! appeared first on Dinakaran.

Related Stories: